அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தக்கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தக்கோரி வழக்கில் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2022-09-26 22:20 GMT

மதுரை,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ெரங்கநாதன் நரசிம்மன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டு இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு சார்ந்த பலரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என பேட்டிகளையும் அளிக்கின்றனர்.

ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை. தவறான புரிதல்களுடன் பொதுமக்களை குழப்பும் வகையில் கூறப்படும் இந்த தகவல் இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது. எனவே அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை தமிழக அரசு தெளிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்