30 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-08-14 19:10 GMT

மதுரை திருமங்கலம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்தது. அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அங்கு இருந்த பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின் காரில் புறப்பட்ட பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார், இதுவரை 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்