9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் 9-ம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.