வாலிபரை கத்தியால் குத்திய தந்தை மீது வழக்கு

வாலிபரை கத்தியால் குத்திய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-15 19:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் மலை செல்வம். இவரது மகன் சூரிய பிரகாஷ் (21). இவர் தனது தாய் கல்யாணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மலை செல்வம், சூரிய பிரகாசை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் திடீரென கத்தியால் சூரியபிரகாசை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சூரிய பிரகாஷ் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் மலை செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்