மேட்டூரில் போலி சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய நிர்வாகி மீது வழக்கு
மேட்டூரில் போலி சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் இ- சேவை மையம் நடத்தி வரும் மோகன்ராஜ் (வயது 33) என்பவர் அரசு சார்பில் வழங்கப்படும் வருமான சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை போலியாக அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கொடுத்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.