போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட5 பேர் மீது வழக்குப்பதிவு

கறம்பக்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-15 17:57 GMT

கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள நரங்கிய பட்டு வைரவன் தெருவை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கறம்பக்குடியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து நேற்று  கைது செய்யப்பட்ட 4 பேரின் உறவினர்கள் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி குமார் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஜமாத் கமிட்டி துணைத்தலைவர் ஜபருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்திக், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணை செயலாளர் முகமது சுலைமான், நகர தலைவர் நூருல் அமீது, எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்