அரளைக்கற்களை கடத்திய வாலிபர் மீது வழக்கு; டிராக்டர் பறிமுதல்

அரளைக்கற்களை கடத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-07 18:17 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் சட்டவிரோதமாக அரளைக்கற்கள் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் கனிமம் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அந்த வழியாக டிராக்டரில் வந்த வாலிபர் அதிகாரியை கண்டதும் டிராக்டரை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து, அந்த டிராக்டரில் சோதனை நடத்தியபோது ஒரு யூனிட் அளவுள்ள அரளைக்கற்கள் டிராக்டரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சுரங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய சேங்கல் குட்டிக்காரன் புதூரை சேர்ந்த அருள்குமார் (வயது 33) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்