விஷ்வ இந்துபரிஷத் நிர்வாகி மீது வழக்கு
விஷ்வ இந்துபரிஷத் நிர்வாகி மீது வழக்கு
குனியமுத்தூர்
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவு செய்வது குறித்து கோவை மாநகர போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி ரங்கராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டி விடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.