விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் தயாளன் (வயது 40), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் அருள் என்பவர் விளை நிலத்தை உழவு செய்ய பயன்படுத்தப்படும் டிராக்டரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைபார்த்த தயாளன் எதற்கான எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.