மனைவி, மைத்துனரை கடித்தவர் மீது வழக்கு

குடும்பத்தகராறில் மனைவி, மைத்துனரை கடித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 20:32 GMT

சிவகாசி, 

குடும்பத்தகராறில் மனைவி, மைத்துனரை கடித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவியை கடித்தார்

சிவகாசி தாலுகாவில் உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கும், இவரது மனைவி கலைவாணி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று முனியாண்டி, மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மனைவியின் முகத்தை கடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த மைத்துனர் அஜித் என்பவரின் கைவிரலை கடித்ததாக கூறப்படுகிறது.

உடனே அருகில் இருந்தவர்கள் வந்து தகராறை விலக்கிவிட்டனர். பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. முதலுதவிக்கு பின்னர் கலைவாணி வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்த முனியாண்டி, தனது மனைவியிடம் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தற்ெகாலை முயற்சி

இதனால் மனவேதனை அடைந்த கலைவாணி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி அஜித் அவரை காப்பாற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கலைவாணி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்