அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி துணைத்தலைவர் மீது வழக்கு

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-27 19:02 GMT

 தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி துணைத்தலைவராக இருப்பவர் சிவக்குமார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கவின்மிகு கரூர் திட்டம் தொடர்பான தொகையை விடுவிக்க பில்லில் கையெழுத்து போடாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார், சிவக்குமாரிடம் தொடர்பு கொண்டு கவின்மிகு கரூர் திட்டத் தொகையை விடுவிக்க பில்லில் கையெழுத்து போடுமாறு கேட்டுள்ளார். அதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிவக்குமார் உள்பட 5 பேர் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமாைர அச்சுறுத்தும் வகையில் தகாதவார்த்தையால் திட்டியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வினாத்குமார் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சிவக்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்