மருமகனை தாக்கிய மாமியார் மீது வழக்கு

மருமகனை தாக்கிய மாமியார் மீது வழக்கு

Update: 2023-07-12 18:45 GMT

விழுப்புரம்

கண்டாச்சிபுரம் தாலுகா காரணை பெரிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 39). இவருக்கும் அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையறிந்த செந்தில்குமாரின் மாமியார் தமிழரசி(52) என்பவர் செந்தில்குமாரிடம் சென்று, என் மகளை எப்படி நீ திட்டி அடிக்கலாம் எனக்கேட்டு அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தமிழரசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்