தே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்கு
கடலூரில், அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற தே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காந்தி பிறந்தநாளையொட்டி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிப்ப தற்காக நேற்று தே.மு.தி.க.வினர் பாரதி ரோடு- சில்வர் பீச் ரோடு சிக்னல் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் மாவட்ட அவை தலைவர் ராஜாராம் முன்னிலை யில் ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஊர்வலமாக சென்றதாக சிவக்கொழுந்து உள்பட 60 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.