இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு

Update: 2022-05-28 15:53 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் மணிகண்டன்(வயது 33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கலியதுரை(25) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரச்சினைக்குரிய நிலத்தை மணிகண்டன் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த மணிகண்டன், கலியதுரை ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். அதன்படி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கலியதுரை, அவரது தந்தை பெரியசாமி, தாய் கலியம்மாள் ஆகியோர் மீதும், கலியதுரை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் ராதா, அம்சவள்ளி ஆகியோர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்