பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு
மூலைக்கரைப்பட்டி அருகே பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரம் ஊரைச் சேர்ந்தவர்கள் சேகர் (வயது 46), முருகன் (48), அழகன் (40), யோவான்தாஸ் (45) மற்றும் ஒருவர் ஆகியோர் அம்பலத்தில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு கூந்தன்குளம் அருகே உள்ள அரமனேரி கிராமத்தில் பொது இடத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து வந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் ஓட்டி வந்த 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.