வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

Update: 2022-08-17 14:48 GMT

கணபதி

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு கோபாலகிருஷ்ணா மில் ரோட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருடைய ஜெயபாலன் (வயது32). வியாபாரி. இவர், தனது வீட்டின் மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் ெஜயபாலனை பார்த்து ஆபாசமாக சைகை காண்பித்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

இதை கண்டித்தபோது, ஜெயபாலனை அவர்கள் 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும் அவர் கழுத்தில் அணிந்திந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த ஜெயபாலன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்