இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 34 பேர் மீது வழக்கு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-14 19:28 GMT

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஆலங்குடியில் வங்கியை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கொத்தமங்கலம் மையம் திலகர் (வயது 45), கொத்தமங்கலம் மையம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி (43), கொத்தமங்கலம் தெற்கு சீனிவாசன் (60), அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (45), ராமகிருஷ்ணன் (45) உள்பட 34 பேர் மீது ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்