உறையூரில் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு

உறையூரில் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-21 19:48 GMT

திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி நேற்று முன்தினம் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் செயலாளர் நாகேந்திரன், உறையூர் மண்டல் நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், தினகரன், பாலா, சிறுபான்மை அணி மாநில துணை தலைவர் பாட்சா உள்பட 30 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட 30 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்