அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 30 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார், அனுமதி பெறாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறி, அவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 30 பேர் மீது உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.