செங்கல் சூளை உரிமையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
செங்கல் சூளை உரிமையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவஞானம். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். இதேபோல் ராஜகிரி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் மேப்பூதகுடியை சேர்ந்த பெரியசாமி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 33) என்பவருக்கும் இடையே தொழில் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சிவஞானம் சம்பவத்தன்று விராலிமலை அருகே உள்ள பகவான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து சிவஞானத்தை அவரது சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவஞானம் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.