விவசாயியை கல்வீசி தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விவசாயியை கல்வீசி தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-09-18 18:45 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் சித்திரங்கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த தாசைய்யன் (வயது 62), விவசாயி. இவர் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் உதயமார்த்தாண்டம் கடம்பாறவிளை ஜான் (48) வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்து வந்தன. இதை தடுக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றி வலையை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், தாசைய்யன், ஜான் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜான் மற்றும் அவரது தந்தை நடராஜன், தாயார் கமலா ஆகிய 3 பேர் சேர்ந்து தாசைய்யன் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தாசைய்யனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இகுறித்து தாசையன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் ஜான் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்