முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2022-06-21 15:32 GMT

விருதுநகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 61). இவரது வீட்டிற்கு பின்புறம் கட்டபொம்மன் தெருவில்குடியிருப்பவர் பெரியசாமி. இவர்கள் இருவருக்கும் தெருவில் குப்பை கொட்டுவதில் பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டதில் பெரியசாமி, அவரது தாயார் தங்கம், மனைவி சந்திரலேகா ஆகிய 3 பேரும் சேர்ந்து பாண்டியனை தாக்கி காயப்படுத்திய கூறப்படுகிறது. இது பற்றி பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் பெரியசாமி உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்