போக்குவரத்து விதிமீறிய 211 பேர் மீது வழக்கு

கோத்தகிரியில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறிய 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-01 22:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் சார்லஸ் மற்றும் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம், குன்னூர் செல்லும் சாலைகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இதில் மதுபோதையில் வாகனங்களை இயக்கிய 2 பேர் உள்பட ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியும், பின்னால் அமர்ந்தும் சென்றவர்கள், சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், ரூ.74 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ரோந்து பணி சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் பபிலா ஜாஸ்மின் கோத்தகிரி பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 40 வாகன ஓட்டிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.1லட்சத்து 89 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்