அரசு பஸ்களை சிறைபிடித்த 20 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி அருகே கோவில் விழாவில் தகராறு: அரசு பஸ்களை சிறைபிடித்த 20 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி,
ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளையில் உள்ள சிவசுடலை மாடசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்கத்து ஊரான புத்தன்முகிலன்விளை ஊர் மக்கள் தங்கள் பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து புத்தன்முகிலன்விளை ஊர் மக்கள் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து சாலையில் அமைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பஸ்களை விடுவித்தனர்.
இந்தநிலையில் அரசு பஸ்ைச வழிமறித்ததாக தர்மபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன் உள்பட 20 பேர் மீது ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
----