மாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வடமதுரை அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி தேவேந்திரபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34), மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவர், தனது 3 சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பழனிச்சாமி மற்றும் முருகன் ஆகியோர் ஒரு லாரியில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் பழனிச்சாமியிடம் வண்டியை ஓரமாக நிறுத்தமாட்டாயா என்று கேட்டு, தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பழனிச்சாமியின் வீட்டு படிக்கட்டை கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் மற்றொரு பழனிச்சாமி, முருகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.