புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-24 18:09 GMT

  நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இனுங்கூரில் உள்ள ஒரு மளிகை கடையில் மனோகரன் (வயது 50) என்பவரும், கோட்டையார்தோட்டம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் கோபாலகிருஷ்ணன் (53) என்பவரும் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்