மதபோதகர் உள்பட 2 பேர் மீது வழக்கு

பணம் மோசடி வழக்கில் மதபோதகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-14 19:00 GMT

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தியான இல்லத்தில் மைக்கேல் என்ற மகிலன் (வயது 62) என்பவர் மதபோதகராக உள்ளார். இவரிடம் ஜோஸ்வா என்ற இசக்கி அறிமுகமாகினார்.

இவருக்கும், சென்னை பகுதியைச் சேர்ந்த ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஜோஸ்வா சுமார் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாகவும், இதற்கு மதபோதகர் மைக்கேல் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த ஆசிரியை இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில், புதுக்கோட்டை போலீசார், மைக்கேல், ேஜாஸ்வா ஆகிய 2 மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்