விவசாயியை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-03 18:29 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள செட்டித்திருக்கோணம் கீழத்தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 60). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் ராஜமாணிக்கத்திற்கும் இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காந்தி தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜமாணிக்கத்திடம் 'ஏன் எனது விவசாய நிலத்திற்கு வந்தாய்?' என்று காந்தி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் பழனிவேல் ஆகியோர் சேர்ந்து காந்தியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த காந்தி அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காந்தி கொடுத்த புகாரின்பேரில் ராஜமாணிக்கம், பழனிவேல் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்