பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் கோழிமேக்கனூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) அணை பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் மீன் குத்தகை அலுவலராக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அணையை பார்வையிட சென்றனர். அப்போது முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த பிரபு, கிருஷ்ணராஜ் ஆகியோர் மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டு 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வாணியாறு அணை பணி ஆய்வாளர் தாஸ் அங்கு சென்று சிவக்குமார், தாமோதரன் ஆகியோரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இதுகுறித்து சிவக்குமார் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.