நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 36). கூலிதொழிலாளி. முருகனுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சரிதா குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்கள் காயம் அடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இருதரப்பினலரும் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த முருகன் (36), ஜீவன் (38), பூங்கொடி (55), சரிதா (36) மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.