தர்மபுரி:
பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் துரைமணி (வயது 65). போதகர். இவருக்கு சொந்தமான இடத்தை கானாபட்டியை சேர்ந்த டெய்லரான மகாலிங்கம் (40) வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் வாடகைக்கு இருந்த இடத்தை காலி செய்யுமாறு துரைமணி கூறியுள்ளார். அப்போது மகாலிங்கம் கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துரைமணி மகாலிங்கத்தை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் போதகர் துரைமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.