1,462 பா.ஜனதாவினர் மீது வழக்கு
மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,462 பா.ஜனதாவினர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் விலை, மின்கட்டணம், சொத்து வரி உயர்வுகளை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, ஓசூர், மத்திகிரி, சூளகிரி, பாகலூர், பர்கூர் உள்பட 29 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி நகர தலைவர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட 1,462 பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.