வார்டு உறுப்பினரின் கணவர் மீது வழக்கு

தளி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய வார்டு உறுப்பினரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-10-02 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அருகே உள்ள மாருப்பள்ளி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சம்பத்குமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு வந்த குனிகல் வார்டு உறுப்பினர் சாந்தம்மாவின் கணவர் நாராயணப்பா (52) என்பவர் பொது கழிப்பறை ஒதுக்கீட்டு தொடர்பாக ஊராட்சி செயலாளரிடம் கையெழுத்து கேட்டுள்ளார். ஆனால் அவர் கையெழுத்து போட மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாராயணப்பா, ஊராட்சி செயலாளரை தாக்கினார். இது தொடர்பாக அவர் தளி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வார்டு உறுப்பினரின் நாராயணப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்