வேப்பனப்பள்ளி அருகே வீட்டின் முன்பு கோலம் போடுவதில் தகராறு-4 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி துர்கா (வயது 26). இந்த தம்பதியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவசங்கரன் (35). சம்பவத்தன்று இரு தரப்புக்கும் இடையே வீட்டின் முன்பு கோலம் போடுவது மற்றும் இடத்தை சுத்தம் செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் துர்கா மற்றும் சிவசங்கரனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்கள் 2 பேரும் வேப்பனப்பள்ளி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 4 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.