விஷம் குடித்துவிட்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

விஷம் கலந்து குடித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-29 16:46 GMT

ராமநாதபுரம், 

விஷம் கலந்து குடித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த பெண்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய்வலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி மகேசுவரி (வயது35).

இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்த அவர், சில நிமிடங்களில் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது மகேசுவரி தனது கணவர் வெளிநாடு செல்வதற்காக இருமேனியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.40 ஆயிரம், 8 பவுன் நகையை கொடுத்ததாகவும் அவர் ஏமாற்றிவிட்டதால் 13 வருடங்களாக அலைவதாகவும், இதனால் விரக்தி அடைந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை

இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்