தம்பதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

தம்பதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-21 20:15 GMT


மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் இறந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒருவரின் தொடர்பால் கர்ப்பமுற்றார். பின்னர் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த முஸ்லிம் தம்பதிக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்தார். அது குறித்து டாக்டர்கள் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். மேலும் முஸ்லிம் தம்பதியினர் எவ்வித சட்ட விதிகளையும் பின்பற்றாமல் குழந்தையை தத்தெடுத்தது உறுதியானது. அதை தொடர்ந்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் டாக்டர் விஜயசரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த பெண்ணிடம், சையது ஆரிப், அவரது மனைவி சஹானா பானு ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக குழந்தையை பெற்று உள்ளனர். இதற்கு ஷமீம்பானு என்பவர் புரோக்கராக இருந்து செயல்பட்டு உள்ளார். எனவே அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் மற்றும் ஷமீம்பானு, சையது ஆரிப், அவரது மனைவி சஹானா பானு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்