சரக்கு வாகனம் சிறை பிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த சரக்கு வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியில் சரக்கு வாகனம் ஒன்று கழிவுகளை கொட்டுவதற்கு வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கும் கொடுக்கப்பட்ட தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணயில் கோட்டூர் ரோட்டில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கொட்டிய கழிவுகளை மீண்டும் அதே வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டும். மேலும் இனி இதுபோன்று கொட்டக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.