மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; பெண் பலி

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; பெண் பலியானார்.

Update: 2023-04-11 18:54 GMT

செம்பட்டிவிடுதி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 40). இவரது உறவினர் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிபட்டியை சேர்ந்த தவமணி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் களபம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கம்மங்காடு நடுப்பட்டி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்ததில், தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி விடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தவமணி உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேன் டிரைவர் மாஞ்சான்விடுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த அப்பாவு மகன் பிரபு (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்