கீரமங்கலம்:
கீரமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் என்கிற சித்திரவேல் (வயது 48). டிரைவரான இவர், தற்போது மரம் வெட்டும் தொழில் மற்றும் காட்டு மரங்களை வாங்கி விறகு வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை பனங்குளத்திற்கு மரம் வெட்டுவதற்காக அதற்கான எந்திரங்களுடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே மதுரையிலிருந்து வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு சரக்கு வேனுடன் தப்பி சென்ற மதுரையை சேர்ந்த டிரைவர் இளங்கோவை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.