10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் முகாம்

உயர்கல்வி பயில்வது குறித்து 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-24 16:27 GMT

உயர்கல்வி பயில்வது குறித்து 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில்நெறி வழிகாட்டும் முகாம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது தகுதிக்கேற்ப உயர்கல்வி பயில பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் ஆலோசனை மற்றும் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் முகாம் இலவசமாக நடைபெற உள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அன்றும், 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு வருகிற 28, 29-ந்தேதிகளிலும் நடைபெறுகிறது.

ஆலோசனை வழங்கப்படும்

இந்த முகாம் காலை 11.00 மணியளவில் பாலாஜி நகர், 2-வது தெரு, பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்