கார் கண்ணாடியை உடைத்து துணிகள் திருட்டு
கார் கண்ணாடியை உடைத்து துணிகள் திருட்டுபோனது.
ஈரோடு சேட்டு காலனி, 4-வது வீதி, அகில் மேட்டை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 47). இவர் கடந்த 23-ந் தேதி ஈரோட்டில் ஜவுளியை மொத்தமாக வியாபாரம் செய்யும் ஒரு கடையில் இருந்து வியாபாரத்திற்காக மாதிரி துணிகளை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியின் முன்பு காரை நிறுத்திவிட்டு, அந்த விடுதி அறையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.