குன்னூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து..!

குன்னூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

Update: 2022-06-08 14:04 GMT


கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவரது மனைவி நிர்மலா ஜூலியட் (44) ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் இன்குலேட்டா (16) மகன் செலின்(12).

ஜெயபால் தனது காரில் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு இன்று பல்லடம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்.நகர் அருகே சென்ற போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த மரம் கார் மேலும் உருண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் நகர போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்