முதுமலையில் கார் கவிழ்ந்து விபத்து

முதுமலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-04-18 18:45 GMT

கூடலூர், 

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சமவெளி பகுதியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் முதுமலை தெப்பக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்ற வாகன டிரைவர்கள் காருக்குள் சிக்கி இருந்த 4 வாலிபர்களை மீட்டனர். அவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த மசினகுடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்