காரை வழிமறித்து தாக்கி வழிப்பறி; 4 பேர் கைது
காரை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகில் தைலா நகர், இடையப்பட்டி வழியாக மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் சிறுவர்கள் சிலர் மது போதையில் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்வோர்களிடமும், வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது. சமீபத்தில் அந்த வழியாக சென்ற ஒரு காரை வழிமறித்து, தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், இதனை தட்டிக்கேட்ட போலீசார் ஒருவரையும் தாக்கியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 8 பேர் கொண்ட கும்பல் மது போதையில் காரை வழிமறித்து தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 18 வயது நிரம்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.