தூக்குப்போட்டு கார் டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு கார் டிரைவர் தற்கொலை
தஞ்சையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கார் டிரைவர்
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 38). கார் டிரைவர். இவருடைய மனைவி அபிநயா. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வரையில் அவர்களுக்கு குழந்தை இல்லை. தங்களுக்கு குழந்தை இல்லாததால் விஸ்வநாதன் சில நாட்களாகவே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஊருக்கு சென்றிருந்தனர். பின்னர், விஸ்வநாதன் மட்டும் வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த விஸ்வநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிணமாக தொங்கினார்
நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவருடைய வீடு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையின் உள்ளே விஸ்வநாதன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.
உடனே போலீசார் விஸ்வநாதன் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.