கார் மோதி 2 பேர் பலி
சாத்தூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
கார் மோதியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது70). இவரும் அதே பகுதியை சேர்ந்த சோலைசாமி (45) என்பவரும் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். வெங்கடேசுவரபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது ஒரு கார், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் சந்திரசேகர், சோலைசாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் சோலைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் பலி
படுகாயம் அடைந்த சந்திரசேகரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி கார் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.