லாரி மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

லாரி மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-16 18:30 GMT

கரூர் மாவட்டம், தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 53). ஆடிட்டர். இவரது மனைவி பானுப்பிரியா (49). இந்த தம்பதிக்கு பூர்ணிமலை (23), ஹரித்யா (21) என்ற மகள்கள் உள்ளனர். ஹரித்யா சேலத்தில் உள்ள ஒரு மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் அவரை சேலத்தில் கொண்டு விட்டு விட்டு வருவதற்காக முத்துராமன் தனது மனைவி மற்றும் மகள்களை அழைத்து கொண்டு காரில் புறப்பட்டார். காரை முத்துராமன் ஒட்டி வந்தார். அந்த கார் மூலியமங்கலம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டு சிக்னல் செய்யாமல் நின்றது.

இதனால் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது. இதனால் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி முத்துராமன், பானுப்பிரியா, பூர்ணிமா, ஹரித்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்