மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
வாலிபர்
கோவில்பட்டி தாமஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுகுமார் (வயது 22). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு கழுகுமலையில் உள்ள உறவினர்களை சந்தித்து விட்டு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கழுகுமலை - கோவில்பட்டி சாலையில் காலாங்கரைபட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த ேபாது எதிரே ஒரு கார் வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுகுமார் பலத்த காயம் அடைந்தார்.
கார் மோதி பலி
இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த சுகுமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான சென்னை விருகம்பாக்கம் சாய் நகர் 2-வது தெருவை சேர்ந்த குலசேகரன் மகன் தினேஷ் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.