ஆட்டோ மீது கார் மோதி 7 பேர் படுகாயம்

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-16 18:45 GMT

செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 43), ஆட்டோ டிரைவர். இவர் ஜெயங்கொண்டம் நோக்கி தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் பீதியடைந்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, ஆட்டோவில் பயணம் செய்த வீரமணி, அவருடைய மனைவி ராதா (34), மகள் கீர்த்தனா (19), உடையார்பாளையம் தெற்கு வாணிபத் தெரு காளிமுத்து மனைவி செல்வி (39), தெற்கு புதுக்குடி பரமசிவம் மனைவி கொளஞ்சி (50), சவுமியா (21), கண்டமங்கலம் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த சக்கரபாணி மனைவி சரிதா (31) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்