கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்

கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்

Update: 2023-08-23 18:45 GMT

காரைக்கால் மாவட்டம் முக்குலத்து தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது53). இவரும், இவரது மனைவி சாவித்திரியும் காரில் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு தனது உறவினர் வீட்டில் நடக்கும் கறி விருந்துக்கு சென்றனர். கார்த்திகேயன் காரை ஓட்டினார். திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நன்னிலம் அருகே காக்கா கோட்டூர் என்ற இடத்தில் சென்ற போது, நிலைதடுமாறி எதிரே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த தனியார் பஸ் மீது கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேரும், பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்